Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 13 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜமால்டீன்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாட்டில் ஒரு இறுக்கமான நிலைமை இருந்தது. ஆனால், தற்;போது அந்நிலைமை மாறி புதிய ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதாக முன்னாள் அமைச்சரும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்ன தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பழைய பொலிஸ் நிலைய வீதியிலுள்ள எழுவெட்டுவான் ஐக்கிய தேசியக் கட்சி கிளை தலைவர் ஏ.எல்.நழீமின் இல்லத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
இப்போது வெள்ளை வான் வருவதில்லை. ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக இயங்குகிறார்கள். 2009 ஆம்; ஆண்டு யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒரு யுத்தம் நடந்துக்கொண்டுதான் இருந்தது.
அதற்காக நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்காக பாடுப்பட்டு, உள்ளக பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தோம் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களான எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி,இபாஸ் முஹம்மட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago