2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கட்டட திறப்பு விழா

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சந்தைக்கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நாளை (14) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் பிரதேச தவிசாளர் வி.புவிதராஜன் தலைமையில் நடைபெறவுள்ளன.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான பி.தயாரெட்ண, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு  புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.

33 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டடங்கள் பிரதேச சபையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .