Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 13 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்குமிடையில் சந்திப்பொன்று பொதுநிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.
எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வட்டார முறைமையில் இடம்பெறவுள்ளதால் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகள், அப்பிரதேசங்களில் வட்டாரங்களை உருவாக்குதல், அதற்கான எல்லைகளை நிர்ணயித்தல், பிரதிநிதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
குறிப்பாக கல்முனை பிரதேச எல்லைகள் நிர்ணயம் சம்பந்தமான சில பரிந்துரைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினரிடம் முன்;வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பரிசீலித்து, அதனை ஏற்றுக்கொள்வதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
பொதுநிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடலகே தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago