Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 13 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் டிப்ளோமா பயிற்சியை முடித்து வெளியேறிய ஆசிரியர்களுக்கு, வெளிமாகாணங்களில் கடமையாற்றுமாறு வழங்கிய அனைத்து நியமனங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் இன்று காலை புதன்கிழமை (13) கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை கல்வியமைச்சில் சந்தித்து மிக நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பயனாகவே இந்த ஆசிரியர்களின் வெளிமாகாண நியமனங்கள் யாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தங்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் நியமனங்களை வழங்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் ஊடக இணைப்பார் எஸ்.எல்.முனாஸ் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருடன் கிழக்கு மாகாணத்தில் டிப்ளோமா பயிற்சியை முடித்து வெளியேறிய ஆசிரியர்கள் நேற்று (12) மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
07 Jul 2025
07 Jul 2025