2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நூல்கள் கையளிப்பு

Sudharshini   / 2015 மே 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேச சபையின் கீழ் இயங்கி வருகின்ற  பதிவு செய்யப்பட்ட ஐந்து நூலகங்களுக்கு, நூலக ஆவணவாக்கல் சபையினால்; தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நூல்கள் திங்கட்கிழமை (11) கையளிக்கப்பட்டன.

பொத்துவில் பிரதேச சபையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸீத், உறுப்பினர் ஏ. பதுர்கான் ஆகியோரால் நூல்கள் நூலகரிடம் கையளிக்கப்பட்டன.

பொத்துவில் பொது நூலகம், ஹிதாயாபும் பொது நூலகம், கோமாரி பொது நூலகம், அறுகம்பே பொது நூலகம், பசறிச்சேனை பொது நூலகம் என்பவற்றுக்கு மேற்படி நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .