2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தேசிய காங்கிரஸின் தேர்தல் சீர்திருத்த முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

Princiya Dixci   / 2015 மே 14 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய காங்கிரஸின் தேர்தல் சீர்திருத்த ஆலோசனை முன்மொழிவு தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் ஜனாதிபதியிடம் புதன்கிழமை (13) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல்முறை சீர்திருத்தம் சம்பந்தமான கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்றது.
 
இக்கலந்துடையாடலுக்கு தேசிய காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்துகொண்டார்கள்.

இக்கலந்துரையாடலின்போது கட்சிகள் தத்தமது அபிப்பிராயங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தன. அதற்கமைவாக ஜனாதிபதி, புதன்கிழமை (13) மதியம் 12.00 மணிக்கு முன்பாக கட்சிகளின் முன்மொழிவுகளை எழுத்துமூலம் தமக்குக் கோரியிருந்தார்.  

அதற்கமைவாக தேசிய காங்கிரஸ் தனது தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது.

அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான அம்சங்களானவை,

-  தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள சிறுபான்மை மக்களினுடைய பிரதிநித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையில் தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

-  தற்போது மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் தொகைக்கு குறையாத வகையில் அந்தந்த மாவட்டங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

-  தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்படும் போது பிரதேச செயலகப் பிரிவுகள் பிரிக்கப்படாத வண்ணம் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஆகிய பிரதான அம்சங்களுடனான ஆலோசனை முன்மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தனது தேர்தல் சீர்திருத்த ஆலோசனையை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் கையளித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .