Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 14 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவை முறையாக அமைத்த பின்பே இப்பிரதேசத்தில் விழாக்கள் நடைபெறவேண்டும் என்று அக்கட்சியின் அதி உச்சபீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.எம்.பழீல் நேற்று புதன்கிழமை(13) மாலை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கட்சியின் தலைமை, உயர்பீடத்தின் முடிவுகளை பொருட்படுத்தாமல் அவற்றை மீறும் வகையில் சட்டத்தை தனது கையில் எடுத்து பழைய பாணியிலேயே தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்து அட்டாளைச்சேனை மத்திய குழுத் தெரிவு முறைகேடாக நடந்துள்ளது.
கட்சியின் தலைவர், செயலாளருக்கு கட்சியின் சிரேஷ்ட பழைய அங்கத்திவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து புதிய தெரிவுக்கான கூட்டம் ஆரம்பத்தில் ஏப்ரல் 2ஆம் திகதியென அறிவிக்கப்பட்டு பின்பு 26-04-2015 மு.ப.9.30மணிக்கு நடைபெறுமென தலைமையினால் பின்போடப்பட்டது.
ஆயினும், ஜனாதிபதியின் அவசர அழைப்பின் நிமித்தம் தேசியத் தலைவர் கொழும்பு செல்லவேண்டி ஏற்பட்டதனால் அக்கூட்டம் இடம்பெறவில்லை. இப்பொழுது மே16, சனிக்கிழமை நடைபெறுமென மத்தியகுழுத் தெரிவுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இப்பொழுது 'அட்டாளைச்சேனை மத்தியகுழு' என்ற பெயரில் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறப்புவிழா மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள்; முன்னெடுக்கப்படுகின்றன
இவற்றில் பழைய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான அழைப்புக்கள் பங்குபற்றுதல் ஆலோசனைகள் பெறப்படவில்லை
இது கட்சியின் அடிமட்டப் போராளிகளிடையே அங்கலாய்ப்பு மற்றும் விசனங்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆகவே, விழாவிற்கு முன்பு மத்தியகுழுவை முறையாக தெரிவு செய்யவேண்டும் அல்லது 16ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு தலைவரினால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய குழுத் தெரிவை செய்தன் பின்பு பிற்பகலில் விழாவை நடத்தவேண்டும் என்ற நியாயமான அவசர கோரிக்கை சிரேஷ்ட அடிமட்ட அங்கத்தவர்களினால் தேசியத்தலைவர், அமைச்சர் ரவூப்; ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி, கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளர் பைசல் காசிம் எம்.பி. இடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் தொடர்ந்துவந்த எல்லாத் தேர்தல்களிலும் 95 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி தியாகங்களுடன் போராடிவரும் அட்டாளைச்சேனை மண்ணில் சிரேஷ்ட போராளிகள் புறக்கணிக்கப்பட்டு சர்வாதிகாரப்போக்கில் கட்சியை பிளவுபடுத்த எடுக்கப்படும் எத்தனங்கள் இக்கட்டத்திலாவது தடுக்கப்பட்டு பரவலாக்கப்பட வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கிவருகின்றது.
புதிய நல்லாட்சியில் சவால்மிக்க தேசியமட்டத் தேர்தலொன்றை எமது கட்சி சந்திக்கவுள்ள இக்காலகட்டத்தில் முறையான மத்தியகுழுத்தெரிவும் அதன் செயற்திறனும் மிகவும் இன்றியமையாதது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago