2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தாதிய உத்தியோகத்தருக்கு பதவியுயர்வு

Thipaan   / 2015 மே 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.எம். உம்மு ஜனீரா பதவி உயர்வு பெற்று தாதியர் பரிபாலகர் நியமனம் பெற்றுள்ளார்.

இவருக்கான பதவியுயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (13) நடைபெற்றது.

இவருக்கான நியமனக்கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் டி.எம்.ஆர்.பி.திசாநாயக்க வழங்கி வைத்தார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் தரம் ii ல் கடமையாற்றி வந்த எம்.எம்.உம்மு ஜனீரா அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்து தரம் ஐ க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X