2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நூலகங்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 14 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா  

ஆசிய மன்றத்தின் அனுசரணையில் கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களுக்கு மாநகர சபையினால் பெறுமதி வாய்ந்த புதிய நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு மாநகர சபையில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஆசிய மன்றத்தின் புத்தக நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.சில்வா ஒரு தொகுதி நூல்களை முதல்வரிடம் கையளித்தார். அதனை முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகத்தின் நூலகரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது அண்மையில் வெளியிடப்பட்ட 'மாண்புறும் மருதமுனையின் பதிவுகள்' எனும் நூல் பிரதியை நூலாசிரியர் ஏ.ஆர்.எம்.சத்தார் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், புத்தக நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.சில்வா ஆகியோருக்கு வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .