Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 15 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ் மக்கள் நியாயமானவர்கள் என்பதுடன், சமூக விட்டுக்கொடுப்புக்களுடன் தமது நியாயமான உரிகளையே கோரி நிற்கின்றனர் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் புதிய சந்தைத்தொகுதி திறப்பு விழா, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தமிழ் மக்கள் ஏனையவர்களின் உரிமைகளை தடுத்து, தமது உரிமைகளை கோராது ஏனைய சமூகத்தினரின் உரிமைகளை விட்டுக்கொடுத்து தமது நியாயமான உரிமைகளையே அன்று முதல் இன்றுவரை கோரி நிற்கின்றனர்
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் தலைமையின் கீழ் புதிய ஆட்சியை அமைத்துள்ளதுடன், நாடும் அமைதியான சூழ்நிலையில் உள்ளது.
நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை நாங்கள் கோரவில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மையின மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து விடயங்களையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும். கடந்த அரசாங்கம் போலன்றி, இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற உரிமைகளை வழங்கவேண்டும். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது என்று நாம் எண்ணுகின்றோம். இந்த நம்பிக்கை வீண்போகாதவாறு இந்த அரசாங்கம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லெண்ண வெளிப்பாடாக சம்பூரில் குடியிருப்புக் காணிகளை மக்களிடம் கையளிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு முன்னேற்றகரமான செயற்பாடாகும். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து இரண்டு அமைச்சுக்களை பெற்றுள்ளோம். இது நல்லிணக்க செயற்பாடாகும்'
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
26 minute ago
29 minute ago