2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்ட பயிற்சி பட்டறை

Princiya Dixci   / 2015 மே 15 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியான் மன்றம், உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்துக்கு அமைவாக மேற்படி பயிற்சிப் பட்டறை, சம்மாந்துறை விளையாட்டு கட்டடத்தொகுதி கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.
 
ஆசியான் மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக ஆசியான் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன் மற்றும் நிதித்துறை ஆலோசகர் சீ.ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
குறித்த பயிற்சிப் பட்டறையில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களினதும் ஆய்வு உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .