Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 15 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை அடையமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பாடசாலைகளில்; கல்வி அபிவிருத்தி முன்னேற்றமடைய வேண்டுமென்றால், அங்கு பௌதீகவளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இன்று பாடசாலைகள் எதிர்கால நவீன உலகுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பில் மாறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியின் கீழ், புதிய அரசாங்கம் கல்விக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து நவீன உலகுக்கு ஏற்ப எதிர்கால சவாலை முறியடிக்கக்கூடிய வகையில் மாணவர்களை உருவாக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபாடு காட்டிவருகின்றது.
கல்வியில் இன்று பாரிய மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றபோதிலும், நாம் அதற்கு தயாராக இல்லாதுள்ளோம்.
அனைத்து செல்வங்களிலும் மேலான செல்வமாக கல்விச் செல்வம் விளங்குகின்றது. இருந்தபோதிலும், அதன் முக்கியத்துவத்தை எந்தளவுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் எல்லோரும் மறுபரிசீலனை செய்து பார்க்கவேண்டும்.
பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் நாம் காட்டும் அக்கறையையும் முயற்சியையும் விட, கல்வித்துறைக்கு காட்டுகின்றோமா என்பதை ஒரு தடவை உன்னிப்பாக பார்க்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025