2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிராமிய பெண்கள் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு

Princiya Dixci   / 2015 மே 15 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிராமிய பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம், கறுக்காமுனையில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது.

கறுக்காமுனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் கிராமிய பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.

குடும்பத்தை தலைமை தாங்கும் குடும்பப் பெண்களின் வாழ்வாதாரம், கிராமிய இளம் பெண்களின் தொழில் வாய்ப்பு, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் பொதுவாக பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது விழிப்புணர்வூட்டப்பட்டதாக வெருகல் பிரதேச பெண்கள் அமைப்பின் தலைவி சிவகலா தயாபரன் தெரிவித்தார்.

கிராம சேவை உத்தியோகஸ்தர் என்.ராஜநாயகி, பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சத்தியகலா பிரியசிவன் உட்பட கிராமிய பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .