2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மண்டபம், தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மே 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை, மத்திய மகா வித்தியாலயத்தின் மண்டபம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூடம் என்பன நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.அன்வர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 18 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை முகப்புத் தோற்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் 45 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட கூட்ட மண்டபத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

இதன்போது தொழில்நுட்ப ஆய்வுகூடமும் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .