2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தம்பிலுவில் மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன தெரிவித்தார்.

தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் அதிபர் எஸ்.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வியாழக்கிழமை (14) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண சபையின் கீழ் இருக்கும் இப்பாடசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டிய விடயமாகும். இப்பாடசாலையை தரம் உயர்த்தவதற்கு கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சு சிபாரிசு செய்துள்ளது. இது நல்ல விடயமாகும்.

நான் மத்திய அரசின் பிரதிநிதி என்ற நிலையில், இப்பாடசாலையை தரம் உயர்த்துவது அல்லது தேசிய பாடசாலையாக மாற்றுவது தொடர்பாக பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X