Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 16 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண கல்விக்கல்லூரிகளில் ஆசிரியர் பயிலுனர்களாக இருந்து தற்போது வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் நீhவழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் தொழில் நுட்ப பீடம், ஆராதனை மண்டபம் மற்றும் பிரதான நுழைவாயில் என்பனவற்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்கள் மற்றும் மாகாண மட்டத்திலுள்ள ஆசிரியர் சமமின்மை மற்றும் இடமாற்றக் கொள்கைகளை சீராக நடைமுறைப்படுத்துவதற்காக மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் பேசியுள்ளேன். மிகவிரைவில் இதற்கான முறையான தீர்வு எட்டப்படும்.
கிழக்கு மாகாணத்தின் சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்து வருவதனை அறிய முடிகின்றது. இவற்றையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை தலைமைத்துவம் மேற்கொண்டுள்ளது.
அரசியலில் இன்று நல்லதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. எமது சமூகத்தின் பிரச்சினைகளை கதைத்துப் பேசி தீர்த்து வைப்பதற்கான நல்ல நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றார்.
பாடசாலை அதிபர் ஏ.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஆரீப் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
2 hours ago