2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நிழல் தரும் அலங்கார மரங்கள்

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான் 

கல்முனை மாநகர சபையினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கல்முனை நகரில் அமைக்கப்பட்டு வரும் ஐக்கிய சதுக்க வாகன தரிப்பிடத்தில் வெள்ளிக்கிழமை (15) நிழல் தரும் அலங்கார மரங்கள் நடப்பட்டன.

கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம். நிஸாம் காரியப்பரினால் மரங்கள் நடப்பட்டன.கல்முனை மாநகர முதல்வரின் கருத்திட்டத்தில் உருவான ஐக்கிய சதுக்க நிர்மாண திட்டத்தின் முதற்கட்டப்பணிக்காக, ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்றிதிட்டத்தின் கீழ் ரூபாய் 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ், கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு, வர்த்தக கட்டடத் தொகுதி, உணவகம் என்பவற்றுடன் வாகனத் தரிப்பிடம் மற்றும் பொழுது போக்கு பூங்கா என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கல்முனை நகரம் இரவு நேரத்திலும் பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றாதக மாற்றியமைக்கப்படவுள்ளதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். றியாஸ், மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ. மஜீத், உள்ளூராட்சி உதவியாளர் எம்.எம். சர்ஜூன், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம். பாறூக் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .