2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சொல்ல முடியாத நிலையில் நாடாளுமன்றம் உள்ளது'

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒரு தேர்தலின் பின்னரே நிலையான ஆட்சியைக் காண முடியும், தற்போதுள்ளது ஒரு தற்காலிக ஆட்சியாகும். இருக்கின்ற பிரதம மந்திரிக்கு பெரும்பான்மை இல்லை. அது மட்டுமல்லாது நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைக் கூட சொல்ல முடியாத நிலையிலேயே இன்று நாடாளுமன்றம் சென்று கொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீhவழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை இரவு (15) அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து nhண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாங்கள் உருவாக்கியுள்ள மைத்திரி யுகம் என்பது இந்த நாட்டில் ஒரு போதுமில்லாத ஓர் அரசியல் கலாசாரமாகக் காணப்படுகின்றது.

முன்னாள் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய அரசியில் அடையாளமாக மதிக்கப்படாத ஒருவர் இன்று இந்த நாட்டிலே மிகப்பெரிய யுகமாற்றமொன்றுக்கு வழிகோலியிருக்கின்றார்.

19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கான அதிகாரங்களையும் ஆட்சிக்காலத்தைக் குறைத்தது மட்டுமல்லாது அதிகாரப் பரவலாக்கங்களையும் கொண்டு வந்து ஒரு பெரிய தியாகத்தை செய்ய முன்வந்துள்ளார்.

அது மட்டுமல்லாது மற்றுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் தான் இறங்கப் போவதுமில்லை எனத்தெரிவித்துள்ள இந்த நாட்டின் ஜனாதிபதி உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒருவராவார்.

இவ்வாறான செயற்பாடுகளையும், நல்லெண்ணங்களையும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் ஆட்சியில் நீதி, நியாயம், நேர்மை போன்றன நடக்கும் என எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை, எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய பல்வேறுபட்ட விமாசனங்கள் கூறப்பட்டலாம் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மிகவும் கனவானாகத்திகழ்கின்றார்.

ஆனால், முன்னாளர் ஜனாதிபதி தாராளமாக வாக்குறுதிகளை வழங்குவார் எதனையும் நிறைவேற்றமாட்டார்.

20ஆவது தேர்தல் சீர்திருத்த சட்ட மூலத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சந்தர்ப்பத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பக்கபலமாகவிருந்த சிறுபான்மைக்கட்சிகளுக்கு தேர்தல் சீர்திருத்தத்தில் அநியாயம் நடந்துவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியாக உள்ளனர் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .