Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 மே 16 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வியாழக்கிழமை (14) சென்று பார்வையிட்டார்.
நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான ஆறு மாத காலத்துக்குள் 40 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மைதானத்தை நிரப்பும் நடவடிக்கை முதல்வரின் விசேட திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பணிகளை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி சகிதம் சென்று பார்வையிட்ட முதல்வர், சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு நின்று வேலைகளை மேற்பார்வை செய்ததுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இதன்போது, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.சாலிதீன், மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
06 Jul 2025