Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 16 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.எஸ்.எம். ஹனீபா
சாய்ந்தமருது பிரதேச மக்களின் நீண்டநாள் தேவைகளுள் ஒன்றாகவிருந்த தோணா அழகுபடுத்தும் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் நகர அபிவிருத்தி , நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் றவுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளவுள்ள சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டத்தினை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கவுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முதலாம் கட்டம் ஜூலை மாதம் நிறைவடையவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகரசபை மேயர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனி , அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், சமுக சேவையாளர் ஏ.எம்.பைரூஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
37 minute ago
44 minute ago