Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
மேயர் பதவியை ஒரு தெய்வமாக மதித்து மக்களுக்கு சேவை செய்தேன் என அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் மேயர் அதாவுல்லா அஹமட் சகி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் பதவிக்காலத்தின் இறுதி நாளான நேற்று (15) மாலை இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நான் சேவை செய்யும் போது யாருக்கும் அரசியல் பார்க்கவில்லை எனக்கு மக்கள் தந்த பாரியபொறுப்பை எவ்வாறு சரியாக செய்ய வேண்டுமென்றுதான் பார்த்தேனே தவிர என்னுடைய அரசியலை வளர்க்க வேண்டும். எவ்வாறு மாகாண சபைக்கு போகவேண்டும் அல்லது நாடாளுமன்றத்துக்கு போக வேண்டும் என நான் நினைக்கவில்லை.
அரசியல் இல்லாமல் நான் வர இயலாது ஆனால் அதற்காக நான் அரசியல் செய்யவில்லை.
பொது சொத்தை அபகரிக்க வேண்டும், ஊழல் புரிய வேண்டும் எங்களது பைகளை நிரப்பவேண்டும் என நான் நினைக்க வில்லை.
சுத்தமாக வந்து சுத்தமாக போகிறோம் மக்களிடம் பாரிய எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது அந்த எதிர்பார்ப்புக்களை எங்களால் இயலுமானவரை முடித்து வைத்திருக்கின்றோம். அதாவது 75 சதவீதமானவற்றை முடித்திருக்கின்றோம். ஆனால் அதிலும் குறையிருக்கின்றது.
இங்கு அதிகமானவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்து வேலை செய்கிறீர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் விடயத்தில் நமக்குள் எதாவது மனக்கசப்புக்கள் எற்பட்டிருக்கலாம்.
ஆனால், அரசியல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ கிடையாது. அவ்வாறு மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு நீங்கள் என்னை பெரும் மனதுடன் மன்னிக்க வேண்டும் என கேட்கிறேன் என தெரிவித்தார்.
நான்கு வருடங்களும் 2 மாதமும் என்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
இந்தக்காலம் பொற்காலம் இதனை மறக்க முடியாது இந்த காலத்தில் எனது தந்தை அமைச்சராக இருந்து எமது மக்களுக்கு பாரிய வழங்களை உண்டாக்கி தந்திருக்கிறார்.
இதனை கொண்டு இந்த மண்ணில் உள்ள சுமார் 40 ஆயிரம் மக்களுக்கும் இங்கு கடமை புரியும் நீங்கள் அனைவரும் மேயராக, மாநகர சபை உறுப்பினராகயிருந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.எம்.சபீஸ்,ஏ.எல்.ஜூனைடீன், எம்.எம்.நிலாம்,கே.எல்.எம்.சறுக், என்.எம்.நஜிமுடீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
06 Jul 2025