Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 13 வறிய குடும்பங்களுக்கு, சுய தொழிலை மேற்கொற்கொள்வதற்காக குடும்பமொன்றிற்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.
கிழக்கு மாகண சமூக சேவைகள் திணைக்களத்தினால் குறைந்த வருமானம்பெறும் தெரிவு செய்யப்பட்ட 13 குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (15) நிதி வழங்கிவைக்கப்பட்டது.
கால் நடைவளர்ப்பு, விவசாயம், சிறு வியாபாரம், குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட சுயதொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளதற்காக இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, பிரதேச சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் நவலெட்சுமி தயாபரன், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago