2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை (16) இடம்பெற்றது.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்வடயச் செய்யும் நோக்கிலேஇக்கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 32 நல்லின கோழிக்கஞ்சுகள் வழங்கப்பட்டன.

சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அரச கால் நடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர் ஏ.நித்திலேஸ்வரன், கால் நடை வைத்திய அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.பசீல், உதவியாளர் எம்.எல்.அன்சார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.முனாபீர், பி.எம்.ஹீஸையிர், ஏ.எல்.முனாபீர், எஸ்.எல்.எம்.இப்றாகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .