Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 16 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் “முப்பெரும் மகிழ்வுகளால் மகுடம் சூடுகிறது மண்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடம், மசூர் சின்னலெப்பை ஆர்கேட் திறப்பு விழா மற்றும் முதல்வர் டாக்டர் ஜலால்தீன் வீதி பெயரிடல் போன்ற நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (15) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
இந்த கலை கலாசார நிகழ்சிகளுடனான இம் முப்பெரும் மகிழ்வுகளைத் தழுவிய இந்நிகழ்வை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமைதாங்கி நடாத்தி வைத்தார்.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான அப்துல் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு இக்கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், சிப்லி பாறூக், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை. நேற்று வெள்ளிக்கிழமை (15) நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையுமாகும். அதில் அங்கம் வகித்த மக்கள் பிரதிநிதிகளையும், இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர்களை வாழ்த்தி இந்நிகழ்வின் பிரதம அதிதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான அப்துல் ரவூப் ஹக்கீம் ஞாபகச் சின்னங்களை வழங்கி வைத்து கௌரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago