2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

Gavitha   / 2015 மே 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 37 வருடங்கள்  ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலபூசனி  சந்திரலிங்கத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15)  கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

விஞ்ஞான பட்டதாரி ஆசிரியையான இவர் 1976இல் நியமனம் பெற்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்பித்து பல மாணவர்களை உயர் நிலைக்கு கொண்டுவந்தவர்.

கல்லூரி அதிபர்  வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்.   கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .