2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சபீலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை பொத்துவில் சபீலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா   கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது.

அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம். அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தஸ்கர அல் ஹக்கானியா அரபுக் கல்லூரி உப தலைவர் எச்.எம். யூசுப் (முப்தி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.பீ. அலியார், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.என். முஸர்ரப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட உலமாக்களும், கல்வி மான்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

முதலாவது அல் ஆலிம் பட்டமளிப்பு விழாவில் 32 ஆலிம்களும், 05ஆவது அல் ஹாபீழ் பட்டமளிப்பு விழாவில் 20 ஹாபீழ்களும் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

அத்துடன், அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 20ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் கொண்டாடப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .