Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 மே 17 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்களின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு 'அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தார் மேம்பாட்டுப் பேரவை' எனும் அமைப்பு, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரலாற்று ஆசிரியர் ஜலீல் ஜீ தலைமையில் அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வு வீதி ஊர்வலத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம், சட்டத்தரணி எம்.ஜஎம்.றாஷிக், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.ஜே.கே.தஹனக, அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு அதிகாரி ஏ.எல்.தௌபீக் மற்றும் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.பிரதாப் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்ததுடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, 1965ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் காணப்பட்டு வந்த தமிழ், முஸ்லிம் இன நல்லுறவுகள் மீண்டும் இந்த தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஊடாக கட்டியெழுப்பட வேண்டுமென்பது இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரினதும் ஏகோபித்த கோரிக்கையாக அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago