Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 18 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்றுவருவதை காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
சம்மாந்துறை, மதீனா உம்மா வீதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் பெருத்தப்பட்டமைக்கு நன்றி கூறும் வகையில், அல்-மபாஸா மகளிர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தினமும் காலையில் எழுந்து தொலைக்காட்சி, பத்திரிகை, வானனொலி ஆகியவற்றில் இடம்பெறும் செய்திகளில் சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கடத்தல் போன்ற செய்திகளே அதிகம் காணப்படுகின்றன.
எமது குழந்தைகள் என்று கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம். இன்று சொந்தக்காரர்கள் என நம்பி அவர்களுடன் பிள்ளைகளை தனியாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ஏனெனில் இன்று 50 சதவீதமான சிறுவர் துஷ்பிரயோகம் எமது சொந்தக்காரர்களினாலும் உறவினர்களினாலுமே இடம்பெறுகின்றன.
எனவே, நான் பெற்றோர்களை வினையமாக கேட்டுக் கொள்ளுகின்ற விடயம்தான் உங்கள் பிள்ளைகளை உங்களின் கண்காணிப்பில் பார்த்து கொள்ளுங்கள். அது பிள்ளையின் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .