Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 19 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கல்வியின் மூலமே ஒழுக்கமுள்ள சமூதாயத்தை கட்டியெழுப்பமுடிகின்றது. வறுமையை காரணம் காட்டி கல்வியை பெறத்தவறுவது சமூகத்தில் பாரிய தாக்கங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரிடும் என்று அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 'வாழ்வின் எழுச்சி சிப்தொற கல்விப் புலமைப்பரிசில்' தலா 16,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் 25 மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'ஒழுக்கமுடையவர்களிடமே ஏனையவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய மனப்பாங்கும் உதவி செய்யக்கூடிய மனநிலையும் காணப்படும்.
பாடசாலைகளும்; பாடசாலைச் சமூகமும் கல்வியுடன் ஒழுக்கமுள்ள சிறந்த மாணவச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே அந்தப் பிரதேசம், சமூகம், முழு நாடும் நன்மை அடையும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago