2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர்களுக்கு பின்னடைவு

Suganthini Ratnam   / 2015 மே 20 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இந்த நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  தமிழ் மக்கள் பல வழிகளிலும் பின்னடைவுகளை எதிர்கொண்டதாக கிழக்கு மாகாணசபையின் விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

துறைநீலாவணை விபுலானந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில்; சீருடை வழங்கும் நிகழ்வு, தில்லையம்பலப் பிள்ளையார் கோவில் முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஒழுக்கவிழுமியங்கள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையிலும்  இன்று நாம் இருக்கின்றோம். இதைக் கட்டியெழுப்பவேண்டும். இதற்காக அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும்.

இன்று எமது சமூகத்தின் மத்தியில் பல சீரழிவுகள் இடம்பெற்றுவருகின்றன.  சிறந்த அறநெறிக்கல்வி போதிக்கப்படாமையே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். இதனால், துறைநீலாவணை விபுலானந்த அறநெறிப் பாடசாலை போன்று அனைத்து இடங்களிலும் அறநெறி போதிக்கப்படவேண்டும். இதற்காக எங்களால் இயன்ற உதவிகளை செய்துதர முடியும்' என்றார்.

அறநெறிக்கல்வியூடாக  சிறந்த நல்லொழுக்கமுடைய சமூதாயத்தை உருவாக்கமுடியும். ஆகையால்,  ஒழுக்கத்தை  மனதில் நிலை நிறுத்திக்கொண்டோமாயின்,   மிகப்பெரிய உறுதி கிடைக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக காந்தியடிகள் விளங்கினார். அவரின் சத்தியசோதனையில் பல ஒழுக்கவிழுமியங்களை அறியமுடியும்' என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .