2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மனைவியை துன்புறுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 மே 19 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மனைவியை துன்புறுத்திய சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை, 15ஆம் பிரிவில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணெருவரை அவரது கணவர், மதுபோதையில் தினமும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி மாலை, அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற கணவர் கை, கால், மற்றும் வயரால் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

மனைவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் கூடியமையால் கணவர் தப்பித்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து மனைவி வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம், அட்டாளைச்சேனை பொலிஸார், கணவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .