Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 மே 20 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலய மட்ட கணித விநாடி வினா போட்டிகள் இம்மாதம் சனிக்கிழமை 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் கணித பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். யூசுப் தெரிவித்தார்.
இந்த போட்டிகள் அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் இப்போட்டியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தரம் 6 தொடக்கம் 12 வரையான மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தரம் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணிக்கும் தரம் 9,10,11,12 மாணவர்களுக்கு காலை 10.30 மணிக்கும் இந்த போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில், பாடசாலை மட்டத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 3 மாணவர்கள் பங்கு பற்றவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .