Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 மே 20 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
'கடமைகளை மேற்கொண்டு மக்களின் பணத்தை சம்பளமாக பெரும் நாங்கள் எமது கடமைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையாயின் மக்களுக்கு பதில் கூற வேண்டிய பொருப்புடையவர்களாக நாம் காணப்படுவோம்' என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனி தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலாளரராக திங்கட்கிழமை(18) பதவியேற்ற இவர், உத்தியோகத்தர் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'அரச இயந்திரத்தை இயக்கும் பணியை பிரதேச செயலக உத்தியோகத்தர்களாகிய நாங்கள் எங்களது பகுதியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்'
ஏனைய சில தொழில்களைப்போலன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்ற மக்களுடன் நேரடியாக கடமையாற்றும் நாங்கள் எமது கடமைகளை ஒன்றிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்' என கூறினார்.
கல்முனை பிரதேச செயலாளராக கடாமையாற்றய எ.மங்கள விக்ரமாராட்சி கண்டிமாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து கல்முனை பிரதேச செயலாளரராக எம்.எச்.முகமட் கனி பொறுப்பேற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
32 minute ago
47 minute ago