Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 20 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஒரு பாடசாலையின் கல்வியை சிறந்த முறையில் முன்னேற்றமடையச் செய்வதற்கு நான்கு விடயங்கள் ஒன்றாக அமைந்திருத்தல் வேண்டும் என்று அம்பாறை மாவட்ட திவிநெகும திணைக்கள கணக்காய்வு உத்தியோகத்தர்; இஸட் ஏ.றஹ்மான், திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
'பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களது சிறந்த முன்னேற்றத்துக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகிய நான்கு விடயங்கள் ஒன்றாக அமைந்திருக்க வேண்டுமென கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நான்கு தரப்பினரும் ஒன்றாக செயற்படும் போதுதான் ஒருபாடசாலையின் கல்வி முன்னேற்றமடையும் என்பது கல்வியியலாளர்களின் கருத்தாகும்' என தெரிவித்தார்.
'இந்த நான்கு தரப்பினரில் ஒரு தரப்பு பாடசாலையின் கல்வி முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கா விட்டால், அந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் அடைவு மட்டத்தில் முன்னேற்றகரமான செயற்பாடை நாம் காணமுடியாது. அங்கு பின்னோக்கிய கல்விச் செயற்பாட்டையே காணமுடியும்'.
'எனவே இந்தப்பாடசாலையில் மேற்குறிப்பிட்ட நான்கு விடயங்களும் பொதிந்திருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது'.
'ஏனென்றால், கடந்த காலங்களை விட இந்த பாடசாலை கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் அண்மைக்காலம் தொட்டு பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்' என கூறினார்.
'எனவே, இங்குள்ள மாணவர்கள் சிறந்த கல்வியை பெற்று முன்னேற்றமடைய, நான்கு தரப்பினரும் அரப்பணிப்புடனும் கூட்டுப்பொறுப்புடனும் செயற்பட்டால் நாம் எதிர்பார்க்கும் அடைவு மட்டத்தை நமது எதிர்கால மாணவர் சமுதாயத்திலிருந்து எதிர்பார்க்க முடியும். ஆகவே சிறந்த கல்வியை பெற அர்ப்பணிப்பும் கூட்டுப் பொறுப்பும் அவசியம்' என்றார்.
பாடசாலை அதிபர் எம்.சரிப்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர் எம்.எம்.பைறூஸ், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜி.எம்.அஸ்ஹர், உறுப்பினர் ஏ.எம்.றினோஸ், உட்பட பிரதி அதிபர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago