2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Thipaan   / 2015 மே 20 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை பிரதேசத்தில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதினாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .