Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 21 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் 40க்கு மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு குறைபாடுகளுடன் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அம்பாறை மாவட்ட பிரதம மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் கே.எம்.பி.சி.விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட பிரதம மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் கே.எம்.பி.சி.விக்கிரமசிங்க தலைமையில் மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்களான யூ.எல்.ஏ.வஹாப், கே.எம்.எஸ்.பி.வி.கருணாதிலக ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கல்முனை மோட்டார் போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாண்டிருப்பு சந்தியில் புதன்கிழமை (20) மாலை 02 மணி நேரம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்வண்டிகள், முச்சக்கரவண்டிகள், வான்கள், தூர இடங்களுக்கான பயணிகள் பஸ்கள், மோட்டார்சைக்கிள்கள் என 40க்கு மேற்பட்ட வாகனங்கள் வீதி போக்குவரத்துக்கு பொருத்தமற்றதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் பிறேக், கைபிறேக், லைற், டயர் என்பன பரீட்சிக்கப்பட்டு அவற்றில் குறைபாடுள்ள வாகனங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவைகள் 10 தினங்களுக்குள் வீதிப் போக்குவரத்துக்கு உகந்ததாக திருத்தியமைக்கப்பட்டு அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர்களிடம் காண்பித்து, தகுதி அறிக்கையை பெற்ற பின்னரே வீதிப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என சாரதிகளிடம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட பிரதம மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் கே.எம்.பி.சி.விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago