Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 21 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்;
முச்சக்கரவண்டியை மறித்து மூதாட்டியொருவரிடம் பணத்தை கொள்ளையிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில்; வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், புதன்கிழமை (20) உத்தரவிட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை கடற்கரைவீதியால செவ்வாய்க்கிழமை (19) மாலை முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் (வயது 83) இருந்த 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இடைமறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்;.
மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை மறைத்து, முகம் தெரியாதவாறு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை 6-ஆம் பிரிவைச் சேர்ந்த மூதாட்டியொருவர் பெருந்தொகை பணத்தை எடுத்துக்கொண்டு, கடற்கரை வீதியூடாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.
இதன்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி விட்டு, முச்சக்கரவண்டியை பரிசோதிக்கவேண்டும் என்று கூறிவிட்டு, குறித்த மூதாட்டியின் இடுப்பில் சொருகி வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மூதாட்டியின் மகனான முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார்சைக்கிளை துரத்திக்கொண்டு சென்றபோதும் கொள்ளையடித்தோர் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மூதாட்டியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago