2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சர்வதேச'இஸ்லாமிக் ரிலிப்' நிவாரண நிறுவனம் அம்பாறை மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் வாழ்ந்து வரும் மூன்று முக்கிய பிரதேச செயலாளர் பிரிவுகளை தெரிவு செய்து, அக்குடும்பங்களின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 1,200 மாணவர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, முதற்கட்டமாக நாவின்வெளி பிரதேசத்தில் 400 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், பாதணிகள், அப்பியாசக்கொப்பிகள் அடங்கிய தலா ரூபா 3,000 பெறுமதியான நிவாரணம் புதன்கிழமை (20)) வழங்கி வைக்கப்பட்டன.

இஸ்லாமிக் ரிலிப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்.இப்றாஹிம் சப்ரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இஸ்லாமிக் ரலிபின் மலேசிய நாட்டின் பணிப்பாளர் சைறுள் சஹிபுதீன் பின் செய்னல் ஆப்தீன், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .