2025 ஜூலை 05, சனிக்கிழமை

அல்-ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Gavitha   / 2015 மே 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை அல் - ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்வைத்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் பள்ளிவாயல் செயலாளர் எம்.ஏ.ஜாபிர், உபதலைவர் யூ.எல்.எம்.சஹீட், பொறியியலாளர் எம்.மக்பூப் மற்றும் நிருவாக உறுப்பினர்களும், பள்ளிவாயல் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை 2ஆம் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்குழுவின் வேண்டுகிணங்க ரூபாய் 10 இலட்சம் நிதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .