2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கட்டாக்காலியாக வீதிகளில் திரியும்  கால்நடைகள் எதிர்வரும்  ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து  அம்பாறையிலுள்ள கால்நடைகள் பராமரிக்கும் இடத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்று அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மீன் தெரிவித்தார்.

அம்பாறை  மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களினுடைய  இணையத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் வி.பரமசிங்கம் தலைமையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்  ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்டாக்காலி கால்நடைகளினால்  நாளாந்தம் விபத்துக்கள் ஏற்படுவதுடன்,  வீதிகளும் அசுத்தமடைகின்றன என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலானவர்களின் கால்நடைகள் வீதிகளிலேயே வளர்கின்றது. இவ்வாறான கால்நடைகளின்  உரிமையாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாலும்,  சிறிய தண்டத்தை செலுத்திவிட்டு, வெளியே வந்து அதே செயற்பாட்டை தொடர்கின்றனர்.

எனவே, வீதிகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் ஒத்துழைக்கவேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.

மேலும், கால்நடைகளை மக்களுக்கு வழங்குகின்ற அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் அவற்றை பராமரிப்பதற்கான வசதிகள் உரியவர்;களிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.இர்சாத், பிரதம பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மயில், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி என்.பிரசாத், மிருக வைத்திய அதிகாரிகள்,  அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .