2025 ஜூலை 05, சனிக்கிழமை

தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பயிற்சிகள்

Kogilavani   / 2015 மே 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தொழில்சார் சுகாதாரம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சியின் இறுதி நாள் வெளிக்களப் பயிற்சிகள் வியாழக்கிழமை(21) திருக்கோவில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் மருதமுனை தும்பு தொழிற்சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இப்பயிற்சிகள் சுகாதார அமைச்சின் தொழில்சார் சுகாதார விசேட வைதத்திய நிபுணர் வைத்தியர் சிநோகா சுரவீர தலைமையில் இடம்பெற்றதுடன் இவருடன் இணைந்து மாகாண தொழில்சார் சுகாதார வைத்திய நிபுணர் எஸ்.அருள்குமரன்,  கல்முனை பிராந்திய மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளை பெற்றுக்கொண்டதுடன் பயிற்சிகள் தொடர்பான அறிக்கைகளையும் சமர்ப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .