2025 ஜூலை 05, சனிக்கிழமை

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினமான மே மாதம் 31ஆம் திகதியை முன்னிட்டு, திவிநெகும சங்கங்களின் தலைவர்களுக்கான புகைத்தில் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.

திவிநெகு தினைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் வருடம் தோறும் நடைமுறைப்படுத்தி வரும் புகைத்தல் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் கொடி தினம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
திவிநெகு தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.எஸ். நயீமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், திவிநெகும முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 
இதன்போது சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், புகைத்தலால் ஏற்படும் பாதிப்புகள், புகைத்தலை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வறுமைக்கும் புகைத்தலுக்குமுள்ள தொடர்புகள் குறித்து உதவி பிரதேச செயலாளர் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .