2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

உணவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.ஹனீபா

ஆரோக்கியமான சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு சுகாதார அமைச்சினால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

தேசிய உணவு போசாக்கு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தாய் மற்றும் சேய் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'நாம் எப்போதும் எமக்குத் தேவையான உணவு வகைகளை உண்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதன் மூலம் நாம் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்த கூடியவர்களாக ஆகிவிடுவோம்' எனத் தெரிவித்தார்.

அத்துடன், 'அரசின் இலக்கை அடைவதற்கும் நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.

அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ், சுகாதார மருத்துவ தாதிகள், தாய் சேய் மருத்துவ அதிகாரிகள் மற்றும் குடும்பத் தலைவிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X