Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 23 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
குற்றச் செயல்களை தடுப்பதற்கு சமூகத் தலைவர்களும் பொது மக்களும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.கே.டீ. ஹேமந்த, வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமிய சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஆலோசனை குழு கூட்டம் அக்கரைப்பற்று ஏசியன் விடுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
'அக்கரைப்பற்று பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுவதாக சிவில் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்களாலும் சமூகத் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைளை உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன.
'மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் பின்தங்கிய பிரதேசங்களிலும் மற்றும் கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களிலும், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் மது அருந்துவதாகவும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது' என கூறினார்.
'இதனைத் தடுப்பதற்கு எனக்கு அறிவித்தால், உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து அவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்'.
'இன்றிலிருந்து மேற்குறித்த பிரதேசங்களுக்கு இரவு வேளையில் நடமாடும் பொலிஸ் குழுவை நியமித்துள்ளேன். இதற்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என கூறினார்.
'குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன' என்றார்.
இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள், சிவில் பாதுகாப்பு குழுவின் பிரதி நிதிகள் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .