2025 ஜூலை 05, சனிக்கிழமை

முள்ளிக்குளத்து மலையடி வயல் காணிகள் கையளிப்பு

Gavitha   / 2015 மே 23 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பாலமுனை ஹிறா நகர மீள் குடியேற்ற கிராமத்தை அண்டிய முள்ளிக்குளத்து மலையடி வயல் காணிகளை உரிமையாளர்களிடம்  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

இலங்கை தொல் பொருள் திணைக்களத்தினால், 7 வருடங்களுக்கு முன்னர் பலருக்கு சொந்தமான விவசாயக்காணிகள் புனித பூமி எனும் போர்வையில் சுற்றிவளைக்கப்பட்டு எல்லைக் கல் நட்டப்பட்டிருந்தது.

இதனால் விவசாயிகள் தமது சொந்த காணிக்குள் விவசாயம் மேற்கொள்ள முடியாது தொல் பொருள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையை எதிர்த்து, காணிகளின் உரிமையாளர்கள் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கமைவாக, இந்த வழக்கை விசாரணை செய்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றம், தொல்பொருள் திணைக்களத்தினால் சுற்றிவளைக்கப்பட்ட காணிகளில் அதன் உரிமையாளர்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

இந்த அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதின்ற பதிவாளர் எம்.ஐ.ஜெய்னுதீன் தலைமையிலான குழுவினர் உரிய விவசாய காணிக்குச் நேரடியாகச் சென்று காணி உரிமையாளர்களிடம் காணிகளை ஒப்படைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .