2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெள்ள நீரை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா ,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனைப் பிராந்தியத்தில் மழைக்காலத்தில் ஏற்படக் கூடிய வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவது மேற்கொள்ள கூடிய நடவடிக்கை குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (22) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.
 
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளையடுத்து,  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்பரைக்கு அமைய அமைச்சின் மேலதிக செயலாளரும் பொறியலாளருமான ரமேஷ் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
 
கல்முனைப் பிராந்தியத்தில் நீண்ட காலப் பிரச்சிணையாக இருந்து வருகின்ற வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டம் குறித்தும் அதற்காக காரைதீவு தொடக்கம் கரைவாகு ஊடான கிட்டங்கி வாய்க்கால் விஸ்தரிப்பு மற்றும் காணி நிரப்புல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
 
மேற்படி ஒருங்கிணைந்த திட்டங்களின் பரிந்துரைகள், உத்தேச வரைபுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்து பொறியலாளர் ரமேஷ் தெளிவுப்படுத்தினார்.
 
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். உத்தேச திட்டத்தை மிகச் சரியாக தயாரிப்போமாயின் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் பொறியலாளர் ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
 
கல்முனைப் பிராந்தியத்தின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாம் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த போது, கல்முனையின் அபிவிருத்திக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் பெற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க உறுதியளித்துள்ளார். கல்முனைப் பிராந்தியத்தின் அபிவிருத்தியில் பிரதமர் மிகவும் கரிசனை கொண்டுள்ளார் எனவும் மேலதிக செயலாளரும் பொறியலாளருமான ரமேஷ் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ஐ.எம். முயினுதீன், கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ. மஜீட் மற்றும் துறை சார் நிபுணர்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .