2025 ஜூலை 05, சனிக்கிழமை

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதி தெரிவு

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் தெரிவாகியுள்ளார்.

புதிய பீடாதிபதி தெரிவு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

கலாநிதி எஸ். குணபாலன் 19 வாக்குகளையும் இவரோடு போட்டியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அப்துல் ரவூப் 9 வாக்குகளையும் பெற்றனர்.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி எஸ். குணபாலன் இப்பீடத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு தலைவராகவும் இருந்து வருகின்றார்.

இவரோடு போட்டியிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். அப்துல் ரவூப் இதே பிடத்தின் கணக்கியல் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .