2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைக்குண்டு செயலிழப்பு

Menaka Mookandi   / 2015 மே 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சம்மாந்துறை, 6ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் முற்றத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செயலிழக்கச் செய்ததாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை, வீட்டு வளவை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டு உரிமையாளரால் மேற்படி குண்டு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்குண்டை மீட்ட பொலிஸார், அம்பாறை பி.டி.எஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இன்று காலை காரைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து அக்குண்டை செயலிழக்கச் செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .