2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வறுமையை போக்கும் ஆயுதம் கல்வி

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் கார்த்திகேசு

பல காரணங்களினால் வறுமை ஏற்படுகின்றது. இந்த வறுமையை இல்லாது செய்வது இலகுவான விடயமல்ல. வறுமையை இல்லாது செய்வதற்கான  ஆயுதம் கல்வியே என்று  திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தின் திவிநெகும் பிரினால் உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வறுமை ஒரு வட்டம் போன்றது. இது தொடர்ந்து சுழன்றுகொண்டிருக்கும்.  வறுமையை  உடைப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளார்கள்.  இதில் கல்வியே முதன்மையான காரணியாக அமைந்துள்ளது.

கல்வி ஒரு சமூகத்தில் குறைந்து காணப்படுமானால் தொடரந்து வருகின்ற சமூதாயமும் முன்னைய சமூகத்தினை விட அதிகமான வறுமை சுமையை வாழ்வில் சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  எனவே, பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒன்றாக கல்வி இருக்கிறது' என்றார்.

இந்த நிகழ்வில்  மாவட்ட திவிநெகும பணிப்பாளர் அனுருத்த சந்துருப, உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன்,  திருக்கோவில் பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் வி.அரசரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒரு மாணவனுக்கு தலா 16,000 ரூபாய் படி  20 மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .