2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான இலவச உபகரணங்கள் வழங்களும் ஆலையடிவேம்பு முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்களும்  வியாழக்கிழமை(28) பிரதேச சமூக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில்; பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு விசேட தேவையுடையோருக்கான இலவச சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள்,  மூக்குக் கண்ணாடிகளை வழங்கிவைத்தார்.

தொடர்ந்து முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேவைகளை வழங்குவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் குறித்த சங்கங்கள் தமது செயற்பாடுகளில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆரய்ந்ததுடன் முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் அவற்றைத் தீர்த்துவைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, சமுர்த்தி மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.சண்முகநாதன், ஆர்.சிவானந்தம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் யு.எல்.உவைஸ் அகமட் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X